search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுக்கு பணம்"

    • சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்.பியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சசிதரூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ஓட்டு வாங்க பொதுமக்கள் மற்றும் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்வத தலைவர்களுக்கு பாரதிய ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு தன்மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • நடிகர் விஜய் தற்போது தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு.
    • அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'சுக்ரன்' படம் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

    இதையடுத்து டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற படத்தில் 'ஹிட்' பாடல்களை கொடுத்ததன் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானார்.

    அதன்பின் விஜய் ஆண்டனி திடீரென சினிமாவில் ஹீரோவானார். இதையடுத்து இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது கதாநாயகன் விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'.இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார்.




    இப்படம் வருகிற 11 - ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் ஆண்டனி, ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் கோவையில் இன்று நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது விஜய் ஆண்டனி கூறியதாவது :- ரோமியோ' படம்' அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கி உள்ளோம்.

    ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படத்தில் தெரிவித்து உள்ளோம்.

    பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள்.ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவதில் ஒரு தாய், மனைவி போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்




    நடிகர் விஜய் தற்போது தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. மேலும் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன்.தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.என தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஓட்டுக்கு பணம் வாங்கினால் கோடீஸ்வரர்கள் மட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும்.
    • லலிதா மஹால் திறப்பு விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி நாரணாபுரத்தில் லலிதா திருமண மகால் திறப்பு விழா நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மனைவி கலந்து கொண்டு திருமண மகாலை திறந்து வைத்தனர். விழாவில் வைகோ பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளேன். பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு ஆபத்து வந்த போது அதனை தடுத்து நிறுத்தினேன். இன்றைய காலகட்டத்தில் அரசியல் கெட்டு விட்டது. ஒரு எம்.பி. தேர்தலுக்கு வேட்பாளர் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை செலவு செய்கிறார்கள்.

    அரசியலை பணம் தான் தீர்மானிக்கிறது என்ற நிலை வந்து விட்டது. பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் கோடீஸ்வரர்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும். அவர்களிடம் இருந்து மக்கள் சேவையை எதிர்ப்பார்க்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது கேரளாவில் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது என்னை தோற்கடிக்க பலர் தீவிரமாக இருந்தனர். அதைபற்றி கவலைப்பட வில்லை.

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அவரது முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது தாயார் உள்பட எங்கள் குடும்பத்தினர் மதுவை ஒழிக்க போராடினார்கள். நாட்டிற்காக எனது குடும்பம் பாடுபட்டிருக்கிறது. மதுரையில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் நீங்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கட்ராஜ், நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், திமுக, ம.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×